நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்!…

விளம்பரங்கள்

பீஜிங்:-சீனாவில் குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற ஒரு லாரி சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே இருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ கெளுத்தி மீன்கள் சாலை முழுவதும் கொட்டி சிதறிய விபரம், சில நூறு அடிகள் சென்ற பின்னரே அந்த லாரியின் டிரைவருக்கு தெரியவந்தது.

அதற்குள் சாலையில் குவிந்து கிடந்த மீன்களை அக்கம்பக்கத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாளிகளில் அள்ளிச் சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அந்த மீன்களை பொறுக்கி எடுத்து, சாலையோரமாக குவித்தனர்.
இதனால் அப்பகுதி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வருகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: