செய்திகள்,விளையாட்டு ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…

ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…

ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!… post thumbnail image
டாக்கா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், வங்காளதேசம் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாக கூறி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரின் உருவபொம்பையை வங்காளதேச ரசிகர்கள் எரித்தனர். இந்திய வீரர் ரோகித் சர்மா 90 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, ருபெல் ஹூசைன் புல்டாசாக வீசிய பந்தில் ‘டீப் மிட்விக்கெட்’ திசையில் கேட்ச் ஆனார். ஆனால் அந்த பந்து இடுப்பு உயரத்திற்கு மேல் புல்டாசாக வீசப்பட்டதால் ‘நோ பால்’ என்று நடுவர் உடனடியாக அறிவித்தார்.

ஆனால், ரீப்ளேயில் அது சரியான பந்து போன்றுதான் தெரிந்தது. இந்த அதிர்ஷ்டத்தின் துணையுடன் உலக கோப்பையில் தனது முதலாவது சதத்தை எட்டினார் ரோகித். நோ பால் என்று அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளதேசத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கிரிக்கெட் வாரியம், நடுவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதோடு இந்த உலக கோப்பையில் 2 சதங்கள் அடித்த வீரரான மக்முதுல்லா (21 ரன்) எல்லைக்கோடு அருகே வழங்கிய கேட்ச்சை முதலில் தவற விட்ட தவான் பிறகு சுதாரித்து கொண்டு பிடித்தார். அப்போது தனது கால் எல்லைக்கோட்டில் பட்டுவிடலாம் என்று உணர்ந்த தவான், சாதுர்யமாக பந்தை உள்பக்கமாக தூக்கிபோட்டு பிடித்தார். இதிலும் நடுவர் தவறாக தீர்ப்பு வழங்கியதா வங்காளதேச ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.

டாக்கா பல்கலைக்கழக மாணவர் பேசுகையில், நடுவர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர். நாங்கள் நேர்மையான முறையில் தோற்கடிக்கப்படவில்லை. அதனால் கவலையில்லை. இது ஒரு கொள்ளையாகும். நாங்கள் மோசமான முடிவுக்கு எதிராகவே போராடுகிறோம். இவற்றை சர்வதேச கிரிக்கெட் வாரியம் சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி