செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!…

பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!…

பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!… post thumbnail image
அடிலெய்ட்:-ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய காலிறுதி போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம், பெரிய பார்ட்னர்ஷிப் இல்லாததால் பாகிஸ்தான் அணி 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பின்ஞ், வார்னர் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சில் திணறினார்கள். பின்ஞ் 2 ரன்னிலும், வார்னர் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த கேப்டன் கிளார்க் 8 ரன்னில் ஏமாற்றினார்.

4-வது விக்கெட்டுக்கு சுமித்துடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். அணியின் ஸ்கோர் 148 ரன்னாக இருக்கும்போது சுமித் 65 ரன்னில் அவுட் ஆனார். அப்போது ஆஸ்திரேலியா 26.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு சிறு நெருக்கடி ஏற்பட்டது போல் தோன்றியது.

ஆனால் 5-வது விக்கெட்டுக்கு வந்த மேக்ஸ்வெல் வாட்சனுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இதனால் ஆஸ்திரேலியா 34 ஓவர் முடிவில் 216 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாட்சன் 64 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய ஹாசில்வுட் ஆட்டநாயகனாகத் தேர்வு பெற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி