புலி படத்தில் சதியா – நடிகர் விஜய் எடுத்த அதிரடி!…

விளம்பரங்கள்

சென்னை:-லிங்கா பட விவகாரத்தில் ரஜினியின் இமேஜை எவ்வளவு தூரத்துக்கு கெடுக்க முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு கெடுத்தார்கள் சிங்காரவேலன் தலைமையிலான தமிழக வினியோகஸ்தர்கள். முந்தைய சில படங்களில் நஷ்டஈடு கொடுத்து வந்த ரஜினி அவர்கள் மீது இரக்கப்பட்டு இப்படத்திலும் ஏற்படும் நஷ்டஈட்டை திருப்பித் தரும் முடிவில் தான் இருந்தார்.

ஆனால் வினியோகஸ்தர்களின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகப் போகவே எனக்கும் தயாரிப்புக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஒரு ஹீரோவாக நடித்தேன் அவ்வளவு தான் என்று ஒதுங்கிக் கொண்டார். இன்று வரை முடிவு எட்டப்படாமல் கோர்ட்,கேஷ் என்று தொடர்கிறது லிங்கா இழப்பீடு விவகாரம். தற்பொழுது, விஜய் நடித்துவரும் புலி படத்தை ரிலீசுக்கு முன்பே அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்துகொண்ட விநியோகஸ்தர்கள், லிங்கா படம் போலவே புலி படத்தையும் அவசர அவசரமாக பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்கின்றீர்கள்.

படம் சரியாக ஓடவில்லையென்றால் என்ன செய்வது. எனவே, புலி படம் ஓடிமுடிந்த பின்பு தான் முழுப்பணம் தருவோம் என தயாரிப்பாளரிடம் கூறினார்களாம். ஆனால் விஜய் ரிலீசுக்கு முன்பே தெளிவாக கூறிவிட்டாராம். வியாபாரம்னு வந்தா லாப, நஷ்டம் வர்றது சகஜம் தான். ஒருவேளை புலி படத்துல உங்களுக்கு நஷ்டம் வந்தா எந்தக் காரணத்தை கொண்டும் இழப்பீடு கேட்கக்கூடாது என அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டபின்பு தான் படம் கொடுக்கப்படும் என கண்டிஷன் போட்டுவிட்டாராம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: