செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 60’ படத்துக்கு கதை கேட்கும் நடிகர் விஜய்!…

‘விஜய் 60’ படத்துக்கு கதை கேட்கும் நடிகர் விஜய்!…

‘விஜய் 60’ படத்துக்கு கதை கேட்கும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது தனது 58-வது படமான ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடித்ததும் விஜய்யின் 59வது படத்தை ராஜா ராணி புகழ் அட்லி இயக்கவிருப்பதும் உறுதி செய்யப்பட்ட விசயம். ஆனால், இவ்விரு படங்களுக்குப் பிறகு விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னும் உறுதிபடுத்தவில்லை.

இந்நிலையில் விஜய் தற்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னிடம் கதை சொல்வதற்கு அப்பாய்ண்மென்ட் கேட்டிருக்கும் இயக்குனர்களை ஒவ்வொருவராக அழைத்து கதை கேட்டு வருகிறாராம். அப்படி கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 5 இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டு வைத்திருக்கிறாராம். கதை கேட்ட அனைத்து இயக்குனர்களிடமும் விஜய், வழக்கம்போல் சொல்லும் பதிலான நீங்க போங்க நான் அப்புறமா கூப்பிடுறேன் என்று சொல்லி தான் அனுப்பி இருக்கிறாராம்.

மேலும், தான் கேட்டிருக்கும் 5 கதைகளில் இருந்து ஒன்றைத்தான் அட்லி இயக்கும் படத்தை அடுத்து நடிக்கும் படத்துக்கு ஒகே சொல்லப் போகிறாராம் விஜய். அதனால் அந்த 5 பேரில் யார் அதிர்ஷ்டசாலி என்பது அட்லி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் அறிவிக்க உள்ளார் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி