செய்திகள்,திரையுலகம் ‘புலி’ படத்தில் திடீர் திருப்பம்!…

‘புலி’ படத்தில் திடீர் திருப்பம்!…

‘புலி’ படத்தில் திடீர் திருப்பம்!… post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கிவரும் புலி படத்தில் விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துவருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் விஜய்யின் கேரக்டரில் திடீர் திருப்பம் வந்துள்ளது. இப்படத்தில் ஒரு விஜய் நிகழ்காலத்தில் வாழும் மருத்துவ கல்லூரி மாணவராகவும் மற்றொரு விஜய் முன் ஜென்மத்தில் சேனாதிபதியாகவும் இருப்பது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் படம் புலி. இப்படத்தில் இவருக்கு இரண்டு விதமான கதாபாத்திரம். இதுவரை இரட்டை வேட படங்களில் பெரிதாக மாற்றம் செய்யாத விஜய், இந்த படத்தில் வித்தியாசம் காட்ட குரலை மாற்றி நடிக்கப்போகிறார் என்று கூறியது முன்பே தெரிந்ததே.
தற்போது மேலும், படத்தில் வாள் சண்டை இருப்பதால் தற்போது அதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார். இது மட்டுமின்றி குங்பூ சண்டைக்காட்சிகளும் படத்தில் உள்ளதாம்.இதற்காக தாய்லாந்தில் இருந்து சிறப்பு சண்டை நிபுணர்களை வரவழைத்து பயிற்சி பெற்று வருகிறாராம் தளபதி. இதில் முன்ஜென்ம விஜய்க்கு ஹன்சிகாவும் நிகழ்கால விஜய்க்கு ஸ்ருதிஹாசனும் ஜோடியாக நடிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி