செய்திகள்,திரையுலகம் பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ் (2015) திரை விமர்சனம்…

பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ் (2015) திரை விமர்சனம்…

பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
பிளாக் அண்ட் ஒயிட்: தி டான் ஆப் ஜஸ்டிஸ், 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட சைனீஸ்-தைவானீஸ் படமாகும்.க்ரைம்-ஆக்ஷன் த்ரில்லாராக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மார்க் சாவோ, லின் சென்சிங், ஹுவாங் போ, நிங் சாங் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்சை யுவே-சண் என்பவரால் இயக்கப்பட்டுள்ள இப்படம் சமூக விரோத கும்பலிடம் இருந்து வெவ்வேறு குணங்களை கொண்ட இருவர் எப்படி உலகத்தை காப்பாற்றுகின்றனர் என்பதை மையமாக கொண்டுள்ளது.

ஹார்பர் சிட்டியில் காவல் துறை அதிகாரியாக பணிபுரியும் மார்க் சாவோ, தீவிரவாதிகளின் சதியை முறியடித்து ஒரு விமானத்தை காப்பாற்றுகிறார். இதையடுத்து மார்க் சாவோவை ஒரு ஹீரோவைப்போல் அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். அவருக்கு மரியாதை அளித்து நன்றியுடன் நடந்துகொள்கிறார்கள்.ஆனால், இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே அப்பகுதியில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைகிறார்கள்.இத்தகைய சமூக விரோத செயல்களை செய்வது யாரென கண்டறியும் கட்டாயத்தில் இருக்கும் மார்க் சாவோ, புத்திசாலியான சென் ஸேன் என்பவருடன் இணைந்து விசாரணையை மேற்கொள்கிறார். விசாரணையின்போது, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் கடத்தல் வழக்கு ஒன்று சம்மந்தப்பட்டிருப்பது தெரியவருகிறது.

மேலும், இந்த வழக்கில் மார்க் சவோவிற்கு முன்பு உதவி செய்த க்ஸ்-உடா என்பவர் சம்பந்தபட்டிருப்பதும் தெரியவருகிறது. இவர்தான் அடுத்து தற்கொலை தாக்குதல் செய்யவிருக்கிறார் என்பதையும் மார்க் சாவோ மற்றும் சென் ஸேன் கண்டறிகிறார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகையே அழிக்க திட்டமிடும் ரகசிய தீவிரவாத கும்பலின் செயல் என்பதையும், இக்கும்பல் ராணுவத்தில் இருந்து திருடப்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்துவதையும், உலகையே 14 நாட்களில் அழிக்கக்கூடிய வைரஸ் ஒன்றை பரவச் செய்ய இருப்பதையும் அறியும் மார்க் சாவோ மற்றும் சென் ஸேன் குறிப்பிட்ட நேரத்தில் சதி திட்டங்களை முறியடித்தார்களா? என்பதை இயக்குனர் சுவாரஸ்யம் நிறைந்த திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார். முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சுவாரஸ்யமான திரைக்கதைக்கு தேவைப்படும் அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளதால் பார்வையாளர்கள் இறுதிவரை அடுத்து என்ன ஆகும் என்ற எதிர்ப்பார்ப்புடன் படத்தை பார்க்கமுடிகிறது. படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. சுவாரஸ்யமான திருப்பங்களை கொண்ட விறுவிறுப்பான க்ரைம் படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘பிளாக் அன்ட் ஒயிட்’ அசத்தல்…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி