செய்திகள்,திரையுலகம் ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த பிரபல தமிழ் நடிகை!…

ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த பிரபல தமிழ் நடிகை!…

ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த பிரபல தமிழ் நடிகை!… post thumbnail image
சென்னை:-தமிழில் ‘தோனி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இப்படத்தை தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழை தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ள தனது முதல் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.

இதில் நடித்தது குறித்து ராதிகா ஆப்தே கூறும்போது, நான் ஆங்கில படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் பெயரை தற்போது வெளியிட முடியாது. படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாக நடித்துள்ளேன். இப்படம் இந்தியாவிலும் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். நான் நடித்த நிர்வாணக் காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டு வெளியாகும் என்றார். சமீபத்தில் ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இண்டர்நெட்டில் பரவியது. அந்த ஆபாச படத்தில் இருப்பது நானல்ல என்று ராதிகா ஆப்தே மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி