செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் இந்தியா!…

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் இந்தியா!…

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் இந்தியா!… post thumbnail image
லண்டன்:-ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவரங்களின் படி, உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005-2009 காலகட்டத்தை ஒப்பிடும் போது 2010-14 இல் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 140 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் இந்தியா 3 மடங்கு அதிகமாக ஆயுத இறக்குமதி செய்திருப்பதாகவும் இந்த சர்வதேச ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், ரஷ்யாவில் இருந்து அதிக பட்சமாக 70 சதவிகித ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த பட்டியலில், இந்தியா உட்பட நான்கு ஆசிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் போர் விமானங்களே முன்னிலை வகிக்கிறது. சமீபத்தில் ஆயுத இறக்குமதி தொடர்பாக புதிதாக பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டுகளிலும், இந்தியா தான் ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி