செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை…

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை…

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை… post thumbnail image
மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய லீக் போட்டிகள் முடிவடைந்தது. 14 அணிகள் ஏ, பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். அதன்படி மொத்தம் 42 லீக் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு அணிகளும் 6 லீக் போட்டிகளில் மோதின.

இந்த லீக் சுற்று போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 5 போட்டிகளில் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர் சமி, நியூசிலாந்து வீரர் போல்ட், ஸ்காட்லாந்து வீரர் டேவே, ஆகியோர் தலா 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெய்லர், பாகிஸ்தானின் வாகாப் ரியாஸ் ஆகியோர் தலா 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் வெட்டோரி, தென்ஆப்பிரிக்க வீரர் மோர்கல், நியூசிலாந்து வீரர் சவுத்தி ஆகியோர் தலா 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 4-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் அஸ்வின் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் மோகித் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் தலா 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி