செய்திகள்,முதன்மை செய்திகள் இளவரசர் ஹாரி ராணுவத்தில் இருந்து விலகுகிறார்!…

இளவரசர் ஹாரி ராணுவத்தில் இருந்து விலகுகிறார்!…

இளவரசர் ஹாரி ராணுவத்தில் இருந்து விலகுகிறார்!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி (30). இவர் முடி சூட்டும் பட்டத்து இளவரசர் பட்டியலில் 4–வது இடத்தில் இருக்கிறார். தற்போது ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். அப்பாச்சி போர் ஹெலிகாப்டரில் இணை விமானியாக இருக்கிறார்.

கடந்த 2005–ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். தற்போது திறமையான அதிகாரி அந்தஸ்தில் உள்ளார். அவர் இதுவரை 10 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் அவர் வருகிற ஜூன் மாதம் ராணுவத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. ஏப்ரல் இறுதியில் ஆஸ்திரேலியாவில் ராணுவ பணி மேற்கொள்ளும். அதன் பின்னர் அவர் விலகுகிறார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2012–ம் ஆண்டு ராணுவ பணி மேற்கொண்டார். அப்போது தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டார். அங்கு அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டரின் விமானி ஆக இருந்து தீவிரவாதிகள் பலரை கொன்று குவித்தார். இது அவரது ராணுவ பணியில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி