1500 திரையரங்குகளில் வெளியாகும் ‘உத்தம வில்லன்’!…

விளம்பரங்கள்

சென்னை:-கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் நடித்து இரண்டு வருடம் கழித்து இந்தப் படம் வருவதாலும் கடந்த இரண்டு வருடங்களில் தமிழ்ப் படங்களின் வியாபார வட்டம் இன்னும் பெருகியிருப்பதாலும் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே, கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும். கமல் நடித்து கடைசியாக வெளிவந்த விஸ்வரூபம் படம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வசூலைப் பெற்றது. அதே போல் உத்தம வில்லன் படத்திற்கும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆந்திராவில் சுமார் 400 திரையரங்குகளிலும், மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என மொத்தமாக 1500 திரையரங்குகளில் படத்தை வெளியிட முயற்சித்து வருகிறார்களாம். தமிழ்ப் படங்களை உலக அளவில் பேச வைக்க கமல்ஹாசன் எடுத்து வரும் முயற்சியில் இந்தப் படமும் கண்டிப்பாக இணையும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: