செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ரன்சேஸ் செய்வதில் சாதனை படைத்த கேப்டன் டோனி!…

ரன்சேஸ் செய்வதில் சாதனை படைத்த கேப்டன் டோனி!…

ரன்சேஸ் செய்வதில் சாதனை படைத்த கேப்டன் டோனி!… post thumbnail image
இந்திய அணிக்கு வெற்றி கேப்டனாக மட்டுமல்லாமல் ரன்சேஸ் செய்வதில் வல்லவராகவும் டோனி திகழ்கிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 288 ரன் இலக்கை நோக்கி ஆடியது. ஒரு கட்டத்தில் இந்தியா 22.4 ஓவரில் 92 ரன்னில் 4 விக்கெட்டை இழந்து திணறியது. 5–வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கடைசி வரை பொறுப்புடனும், அதிரடியாகவும் விளையாடி 8 பந்து எஞ்சி இருந்த நிலையில் அணியை வெற்றி பெற வைத்தது.

ரெய்னா 104 பந்தில் 110 ரன்னும் (9 பவுன்டரி 4 சிக்சர்), டோனி 76 பந்தில் 85 ரன்னும் (8 பவுன்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். டோனி தொடக்கத்தில் மிகவும் நிதானமாக ஆடினார். நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினார். ரெய்னாவிடம் அடிக்கடி ஆலோசனை கூறி வந்தார். கேப்டன் திறமையில் அவர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினர்.

ஆட்டத்தை முடித்து வைப்பதில் டோனியே சிறந்தவர் என்பதை அவர் பலமுறை நிருபித்து காட்டி இருக்கிறார். வெற்றிக்கரமாக ரன்சேஸ் செயலில் அவர் புதிய சாதனை படைத்துள்ளார். வெற்றிகரமான ரன்சேஸ்சிங் சராசரியில் அவர் 100–யை தாண்டியுள்ளார். டோனி தலைமையில் 141 போட்டியில் இந்தியா ரன்னை சேஸ் செய்துள்ளது. இதில் 82 ஆட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. 38 ஆட்டத்தில் அவர் ஆட்டம் இழக்காமல் இருந்துள்ளார். இதனால் சராசரி 109.19 ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி