செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்!…

யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்!…

யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும் – விஞ்ஞானிகள் தகவல்!… post thumbnail image
ஜோகன்னஸ்பர்க்:-பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில், அவற்றை கண்டுபிடிக்கும் திறன் அதற்கு அதிகமாக காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் தங்கள் காட்டிற்கு திரும்பியபோதுதான் யானைகளாலும் கன்னி வெடிகளை மோப்பம் பிடிக்க முடியும் என்பதை கண்டறிந்தார்கள்.

கன்னி வெடிகளை மறைத்து வைத்து யானைகளை கொண்டு கண்டுபிடிக்கும் சோதனையை தென் ஆப்பிரிக்காவின் வடக்கு தலைநகரான பிரிட்டேரியாவில் விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். இதில் யானைகள் 96 சதவீதம் மிக சரியாக அசிட்டோன் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட பைகளை கண்டுப்பிடித்தன. இந்த பரிசோதனைகளுக்கு அமெரிக்க ராணுவம் பெரிய அளவில் நிதியுதவி செய்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க ராணுவ அதிகாரி கூறும்போது, யானைகளை போர் நடைபெறும் இடங்களில் பயன்படுத்தும் நோக்கம் இல்லை. ஆனால் அது பயன்படுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை நவீன சென்சார் தொழிற்நுட்பத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி