செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சசிகுமாருக்கு கை முறிந்தது!…

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சசிகுமாருக்கு கை முறிந்தது!…

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சசிகுமாருக்கு கை முறிந்தது!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக்காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும், 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தது.

இன்று படமாக்கப்பட்ட ஆக்ரோஷமான, அதிரடியான சண்டைக்காட்சியின் போது சசிகுமார் சற்றும் எதிர்பாராவண்ணம் விபத்துக்குள்ளானார். இதனால் அவரது இடது கை எலும்பு முறிந்தது.
உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் சசிக்குமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

சிறிது காலம் ஒய்வெடுக்கும்படி மருத்துவர்கள் சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். சசிக்குமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர். சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி