செய்திகள்,திரையுலகம் ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு ட்ரீட்!…

‘தல’ அஜித் ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு ட்ரீட்!…

‘தல’ அஜித் ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு ட்ரீட்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில் தீவிர அஜித் ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இவருடைய பெரும்பாலான படங்களில் அஜித்தை பற்றி ஏதேனும் வசனம் பேசி விடுவார். அந்த வகையில் சிம்பு நடிப்பில் மார்ச் மாத இறுதியில் வாலு திரைப்படம் வருவதாக இருந்தது. ஆனால், வழக்கம் போல் இப்படம் தள்ளி போய்விட்டது.

ஆனால், படம் தள்ளிபோனாலும் அடுத்து படத்தின் ரிலிஸ் தேதி மே 1 என கூறப்படுகிறது. அன்றைய தினம் அஜித்தின் பிறந்த நாள் என்பதால் தல ரசிகர்களுக்கு டபுள் விருந்து தான். ஏனெனில் இப்படத்தில் சிம்பு அஜித் ரசிகராகவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி