கம்ப்யூட்டரில் தொடர்ந்து விளையாடியதால் வாலிபர் பலி!…

விளம்பரங்கள்

ஷாங்காய்:-சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்து வந்தவர் வு டாய். 24 வயது இளைஞரான இவர் கம்ப்யூட்டர் கேம் பிரியர். இதற்காக சமீபத்தில் ஒருநாள் அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அங்கு அவர் ‘வேர்ல்டு ஆப் வார்கிராப்ட்’ என்ற விளையாட்டை தொடர்ச்சியாக 19 மணி நேரம் விளையாடினார்.

அப்போது அவருக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது. தொடர்ந்து இருமியவாறே இருந்த அவர், திடீரென இருக்கையில் இருந்து கீழே சாய்ந்தார். அவரது வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் வு டாய் பரிதாபமாக இறந்து விட்டார். ஓய்வின்றி விளையாடியதால்தான் இந்த மரணம் ஏற்பட்டதாக போலீசார் கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: