செய்திகள்,திரையுலகம் வானவில் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

வானவில் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

வானவில் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்… post thumbnail image
ஜிதின் வெளிமாநிலத்தில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வருகிறார். இசை மீது மிகவும் ஆர்வம் கொண்ட ஜிதினுக்கு கல்லூரி அளவில் நடக்கும் அனைத்திந்திய இசைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே லட்சியம். இந்த லட்சியத்துடன் அந்த கல்லூரியில் படித்து வரும் ஜிதினுக்கு, பவித்ரன் நண்பராகிறார். இருவரும் அதே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள். இந்நிலையில், ஒருநாள் இவர்கள் படிக்கும் கல்லூரியில் நடக்கும் இசைப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார் ஜிதின். இதையடுத்து அதே கல்லூரியில் படிக்கும் ஜோஸ் செல்வராஜ், ஜோனத்தான், சாய் சங்கர் ஆகியோர் வைத்திருக்கும் இசைக்குழுவில் இவரை சேர்த்துக் கொள்கிறார்கள்.

அதன்பிறகு ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும் கல்ச்சுரல் நிகழ்ச்சியில் இவர்களது இசைக்குழுவே முதல் பரிசை தட்டிச் செல்கிறது. ஒருகட்டத்தில் மாவட்ட அளவில் ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடைபெற ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள இசைக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது திறமையை காண்பிக்கின்றனர். இதில் நாயகிகளான ஜனனி ராஜன், ஷல்வி ஷாரோன், மாயா, ராதிகா ஜார்ஜ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு இசைக்குழுவும், மற்றொரு கல்லூரியில் இருந்து கெஸான்டராவும் கலந்து கொள்கிறார்கள்.இதில் ஜிதினின் இசைக்குழு முதல் இடத்தையும், ஜனனி ராஜனின் இசைக்குழு இரண்டாவது இடத்தையும், கெஸான்டரா மூன்றாவது பரிசையும் வெல்கிறார்கள்.முதல் மூன்று இடத்தை பிடித்த இவர்கள் மாநில அளவில் நடக்கும் இசைப் போட்டிக்கு தேர்வாகிறார்கள். அதனால், அனைவரும் ஒன்றாக இணைந்து மாநில அளவில் நடக்கும் போட்டியில் முதல் பரிசை வெல்ல முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் இவர்களுக்குள் சிறு சிறு சண்டைகளும் வருகிறது. இதிலிருந்து இவர்கள் மீண்டு மாநில அளவில் நடக்கும் போட்டியில் வென்றார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இந்த படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களே. இவர்களே படத்தில் இடம்பெறும் சுமார் 15-க்கும் அதிகமான பாடல்களை பாடி, நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் எந்தவித ஆபாசமும் இல்லாமல் அழகாக படமாக்கியிருக்கிறார். ஆனால் படத்தில் காட்சிகளை விட பாடல்களே மேலோங்கியிருப்பதால் சற்று எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இசைப் போட்டிக்கு மட்டும் பாடல்களை பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து ஒவ்வொரு உணர்ச்சிக்கும் பாடல் கொடுத்திருப்பது சற்று இரைச்சல்தான். இடையில் பவித்ரனை வைத்து புதிய கதையை சொல்ல வந்திருக்கிறார். அந்த கதையையும் பாதியில் நிறுத்திவிட்டு, வேறு பக்கம் சென்றுவிட்டார். இவருடைய இசையில் பாடல்களும் பெரிதாக கேட்கும்படி இல்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘வானவில் வாழ்க்கை’ இசை………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி