‘தல’ அஜித்தை கலாய்ப்பாரா சந்தானம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சந்தானம் தற்போது உதயநிதியுடன் நண்பேன்டா படத்தில் நடித்து விட்டு, ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடியன் என்றபோதும், ஆர்யா டூயட் பாடும் காட்சிகளை தவிர அனைத்து காட்சிகளிலும் இவரும் அவருடன் வருகிறாராம்.

இந்தநிலையில், தான் கார்த்தியை வைத்து இயக்கிய சிறுத்தை படத்தில் சந்தானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ரைக்டர் சிவா, அஜீத்தை இயக்கிய வீரம் படத்தில் சந்தானத்துக்கு குறைவான காட்சிகளே கொடுத்திருந்தார். ஆனால், அடுத்தபடியாக அஜீத்தை இயக்கும் புதிய படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு அதிக காட்சிகளை ஒதுக்கியுள்ளாராம் சிவா.

அந்த வகையில், ஆர்யா, உதயநிதியுடன் படம் முழுக்க வருவது போன்று, இந்த படத்தில் அஜீத்துடனும் படம் முழுக்க வருகிறாராம் சந்தானம். அதேசமயம், மற்ற ஹீரோக்களை கலாய்ப்பது போல் இலலாமல் அஜீத்தின் ரசிகர்கள் டென்சன் ஆகாத வகையில் அடக்க ஒடுக்கமாக கலாய்க்கிறாராம் சந்தானம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: