காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபன்!…

விளம்பரங்கள்

சூரத்:-குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நர்கோல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் பண்டாரி(21). இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 16 வயதுப் பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். தினமும் பள்ளி முடிந்ததும் அருகிலுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் வைத்து அந்தப் பெண்ணை சந்தித்து வந்த அஜய், 3 மாதங்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணை காம்ப்ளக்சின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.

அஜயும் அந்தப் பெண்ணும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சில வாரங்களுக்கு முன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர் முடிவு செய்தனர். அப்போது அதிலிருந்து பின் வாங்கிய அஜய், அந்தப் பெண்ணுடனான உறவையும் துண்டித்துள்ளார். திருமணத்திற்கு முன்னரே அஜயின் நடத்தை தெரிந்ததே என்று எண்ணி அந்தப் பெண்ணின் பெற்றோர் வேறு வரன் தேடத் தொடங்கினர். அந்த நேரத்தில் தான் தனது மகளின் ஆபாச படம் பேஸ்புக்கில் உலவுவது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முந்தினம் அஜய் பண்டாரி மீது காவல் துறையில் அளித்துள்ளனர். அஜயை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: