‘உத்தமவில்லன்’ பட ரிலீஸ் தள்ளிப்போனது!…

விளம்பரங்கள்

சென்னை:-விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம் உத்தம வில்லன். இப்படத்தில் கமல், எட்டாம் நூற்றாண்டு கூத்து கலைஞர், 21ம் நூற்றாண்டில் நடிகர் என இரண்டு வித்தியாசமான பரிமாணங்களில் நடித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸூம், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸூம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வந்தது. சமீபத்தில் படத்தின் பாடல்களும் வௌியிடப்பட்டன. முன்னதாக இப்படத்தை ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. சில பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் ஒருவாரம் தள்ளி போகிறது. அதாவது ஏப்ரல் 2ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: