செய்திகள்,திரையுலகம் முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்…

முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்…

முரட்டு கைதி (2015) திரை விமர்சனம்… post thumbnail image
படத்தின் துவக்கத்திலேயே சுதீப்பை போலீஸ் கும்பல் துரத்தி பிடிப்பது போல் காட்சி தொடங்குகிறது. போலீஸ் பிடியில் சிக்கும் சுதீப்பை போலீஸ் உயரதிகாரியான ஜெகபதி பாபு விசாரிக்கிறார். அப்போது, டாக்டரான நாசரையும், போலீஸ் அதிகாரியான ஆஷிஷ் வித்யார்த்தியையும் எதற்காக கொன்றாய் என அவரிடம் விசாரிக்கிறார். அதற்கு சுதீப் கூறுவதுபோல் கதை தொடங்குகிறது. சொந்தமாக ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் சுதீப்புக்கு ஜாதகம் மற்றும் ஜோசியத்தில் நம்பிக்கையுடைய போலீஸ் அதிகாரியான ஆஷிஷ் வித்யார்த்தியும், எதற்கும் பொருந்தாத காரணத்தை வைத்து குழப்பி விடும் டாக்டரான நாசரும் மனரீதியாக தொந்தரவு கொடுக்கிறார்கள்.

இதுமட்டுமில்லாமல், ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபல தாதாவான அச்சுத்குமார் தொழில் ரீதியாக தொந்தரவு கொடுக்கிறார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் சுதீப். ஒருகட்டத்தில், சிறுவயதிலிருந்தே நட்புடன் பழகி வரும் பாருல் யாதவையும், சுதீப்பும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த திருமணத்திற்கு ஆஷிஷ் வித்யார்த்தி மூலம் தடை வருகிறது. இதனால் பாருல் யாதவ் தற்கொலை செய்துகொள்கிறாள். அவளைக் காப்பாற்ற போராடும் சுதீப்புக்கு ஒத்துழைக்க டாக்டரான நாசரும் மறுக்கிறார். இதனால் பாருல் யாதவ் இறந்துவிடுகிறாள். இதனால் மனஉளைச்சல் அடைந்த சுதீப், ஆஷிஷ் வித்யார்த்தியையும், நாசரையும் கொடூரமாக கொலை செய்துவிடுகிறார். அதிலிருந்து தப்பித்துச் செல்லும்போதுதான் போலீசின் பிடியில் சிக்கிவிடுகிறார் சுதீப். விசாரணைக்கு பின்னர் ஆஷிஷ் வித்யார்த்தி குறித்தும், நாசர் குறித்து போலீசார் விசாரணையில் இறங்குகின்றனர். ஆனால், சுதீப் கூறுவதுபோல், ஆஷிஷ் வித்தியார்த்தி ஜாதகம், ஜோசியம் என்பதில் சற்றும் பிடிப்பு இல்லாதவர் என்றும், அதுபோல், நாசரின் கொலைக்கும் சுதீப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிய வருகிறது.

சுதீப் இறந்துவிட்டதாக கூறும் பாருல் யாதவ்வும் உயிருடன்தான் இருக்கிறாள். இதையெல்லாம் அறிந்து குழம்பிப் போகிறார் ஜெகபதி பாபு. ஒருகட்டத்தில் சுதீப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வருகிறது. அவருடைய கற்பனை உலகத்தில் அவர் வாழ்ந்ததைத்தான் விசாரணையில் கூறினார் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த கொலைகளை சுதீப் சுயநினைவோடுதான் செய்திருக்கிறார் என்பது போலீசாருக்கு ஒருகட்டத்தில் தெரிய வருகிறது. மேலும், இரண்டு பேரை சுதீப் கொல்ல திட்டமிட்டுள்ளதும் தெரியவருகிறது.சுயநினைவோடு கொன்றுவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் சுதீப் நடிக்க காரணம் என்ன? இன்னும் சுதீப் கொலை செய்யப் போகும் அந்த இரண்டு பேர் யார்? அவர்களுக்கும் சுதீப்புக்கும் என்ன பகை? என்பதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் நாயகனான சுதீப்புக்கு ஆக்ஷன் காட்சிகள் நன்றாகவே வருகிறது. நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும் பலே. தெலுங்கு படத்தின் டப்பிங் என்பதால், இவருடைய குரலுக்கு பொருத்தமான குரலை தேடிப்பிடித்து போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். படம் முழுவதும் ஏதோ தொண்டையில் பிரச்சினை இருப்பவர் போன்றே குரல் வந்திருப்பது மட்டும் சற்று நெருடலாக இருக்கிறது.

படத்தின் நாயகியாக பாவனாவை சொன்னாலும், இவர் வரும் காட்சிகள் கடைசி அரை மணி நேரம்தான். படத்தின் திருப்புமுனையே இவருடைய கதாபாத்திரம்தான். சில காட்சிகளே வந்தாலும் எளிதாக மனதில் பதிகிறார். சுதீப்புடன் படம் முழுக்க வலம் வரும் பாருல் யாதவ் அழகால் கவர்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். சுதீப்புடன் செல்லமாக சண்டை போடுவதாகட்டும், கொஞ்சுவதாகட்டும் இரண்டிலும் மனதை நெருடுகிறார்.ஆஷிஷ் வித்யார்த்தி கழுத்து, கையில் தாயத்து, விரல்களில் முத்துக்களால் ஆன மோதிரம் என ஒரு ஜோசியக்கார போலீசாக மிரட்டியிருக்கிறார். சாதாரணமாக பேசும்போதுகூட மிரட்டுவது போன்றே தெரிகிறது. அதேபோல், டாக்டராக வரும் நாசரும் வேடிக்கையாக பேசினாலும், முகத்தில் வில்லத்தனம் காட்டி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. தாதாவாக வரும் அச்சுத்குமார் காமெடி தாதாவாக வலம் வந்திருக்கிறார். படம் பார்ப்பவர்களை கடைசி வரை சீட்டை விட்டு எழுந்திருக்கவிடக் கூடாது என்பதற்காக படம் முழுவதும் சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் என்று வைத்து திறம்பட இயக்கியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார். அரசியல் பிரச்சினையை படத்தில் இழுத்திருந்தாலும், அதை பெரிதாக கையாளமல் நாசூக்காக கையாண்டிருக்கிறார். சேகர் சந்துரு ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் பளிச்சிடுகிறது. குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் வரும் சேசிங் காட்சிகளில் இவரது கேமரா சுழன்று படம் பிடித்திருக்கிறது. ஹரிகிருஷ்ணா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘முரட்டு கைதி’ சஸ்பென்ஸ்…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி