அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!…

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!…

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!… post thumbnail image
புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத தலைரான மசரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பல உறுப்பினர்கள் பலர், நாட்டின் பாதுகாப்பு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்கு எதிரான நபர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். எனவே இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து ஆலம் விடுதலை குறித்து பிரதமர் மோடி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

நாட்டின் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கு தேசப்பற்று குறித்து யாரும் பாடம் நடத்த தேவையில்லை. அதே சமயம் ஆலம் விடுதலை தொடர்பான உங்களது ஆவேச பேச்சை மத்திய அரசும் எதிரொலிக்கிறது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசுடன் அம்மாநில அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றார். முன்னதாக ஆலம் விடுதலை தொடர்பாக அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தரும் விளக்கம் ஏற்புடையதாக இல்லையென்றால் தகுந்த அறிவுரை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி