அட்லி படத்தில் நடிகர் விஜய்யின் கேரக்டர்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘விஜய் 59′ படத்தில் விஜய் போலீஸ் ஆபிசராக நடிக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் இப்படத்தில் அவரது கான்ஸ்டபிளாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இயக்குனர் அட்லி நடிகர் வடிவேலுவை சந்தித்து இப்படத்தின் கதையை கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்துவரும் வடிவேலு கனமான கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் காமெடியனாக நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: