செய்திகள்,விளையாட்டு பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!…

பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!…

பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!… post thumbnail image
ஆக்லாந்து:-தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 222 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் டக்வொர்த் லெவிஸ் விதிப்படி தென்ஆப்பிரிக்கா அணிக்கு 47 ஓவரில் வெற்றி இலக்கு 232 ரன்னாக நிர்ணயிக்கப்பட்டது.

எளிதான இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்காவிற்கு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். தொடக்க வீரர் டி காக் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். 2-து விக்கெட்டுக்க்கு அம்லாவுடன், டு பிளிஸ்சிஸ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி நல்ல முறையில் ஆடியது. 67 ரன் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 10-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அவர் 29 பந்தில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் அம்லா 27 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ரசவ் 6 ரன்னிலும், மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும், டுமினி 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி சிக்ஸர், பவுண்டரியாக விளாசினார். இதனால் அந்த 200 ரன்னை கடந்தது. ஆனால், டி வில்லியர்ஸ் 58 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்னில் 9 விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த தஹிர் ரன் ஏதும் எடுக்காததால் தென்ஆப்பிரிக்கா 202 ரன்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர் மொகமது இர்பான், ரகத் அலி, வாகப் ரியாஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 49 ரன்கள் எடுத்த சர்பிராஸ் அகமது ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். விக்கெட் கீப்பரான இவர் 6 கேட்ச் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி