செய்திகள்,திரையுலகம் காதலனை நினைத்து நடிகை இலியானா ஏக்கம்!…

காதலனை நினைத்து நடிகை இலியானா ஏக்கம்!…

காதலனை நினைத்து நடிகை இலியானா ஏக்கம்!… post thumbnail image
சென்னை:-பாலிவுட் நடிகையாகிவிட்ட நடிகை இலியானா, அங்குள்ள டிரெண்டுக்கு ஏற்ப பாய்பிரண்டுடன் டேட்டிங் விஷயத்தையும் தவறவிடாமல் பின்பற்றுகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவரை தனது காதலன் பற்றி சத்தம் காட்டாமல் இருந்தவர் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு போட்டோகிராபரான ஆஸ்திரேலிய காதலர் ஆன்ட்ரு நிபோனுடன் பொது இடங்களுக்கு கைகோர்த்துக்கொண்டு வரத் தொடங்கினார்.

சமீபகாலமாக இருவரும் தொழில் ரீதியாக பிஸியாக இருப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. காதலன் அருகில் இல்லாததை இணையதள பக்கத்தில் ‘மிஸ் யூ லாட்‘ என ஏக்கத்துடன் வெளியிட்டிருக்கிறார் இலியானா. அதேபோல் ஆன்ட்ருவும் ஏக்கத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது, காலையிலேயே இலியானாவின் மெசேஜ் பார்த்து கண் விழிக்கிறேன். அவர் என்னை ரொம்ப மிஸ் செய்கிறார். அவரது மெசேஜ் என்னை வாட்டுகிறது. சீக்கிரமே அவரை சந்திக்க செல்கிறேன் என்றார். இவர்களின் காதல் பிரிவு விரைவிலேயே இருவரையும் திருமண பந்தத்துக்குள் இணைத்து வைக்கும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி