நடிகர் விஜய்யின் விருப்பத்தை நிறைவேற்றிய தயாரிப்பாளர்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய் – வடிவேலு கூட்டணியில் வந்த அத்தனைப் படங்களிலும், நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு அமைந்தன. விஜய்யின் தோல்விப் படம் எனப்பட்ட சுறாவில் கூட, வடிவேலுவின் நகைச்சுவை சிறப்பாக அமைந்தது. காவலன் படத்தில் விஜய் – வடிவேலு காமெடி பிரம்மாதமாக அமைந்தது. ப்ரண்ட்ஸ், வசீகரா, மதுர, பகவதி, சச்சின், போக்கிரி, வில்லு படங்களில் இவர்களின் நகைச்சுவை உச்சம் தொட்டது. விஜய்யின் ஆரம்ப காலப் படமான சந்திரலேகாவிலேயே விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார் வடிவேலு.

இப்படி தனது ஆரம்ப நாட்களிலிருந்து உடன் பயணித்த வடிவேலு, இன்று கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளார். மற்ற பெரிய நடிகர்கள் படங்கள் எதிலும் அவருக்கு வாய்ப்பில்லாத நிலை. இந்த சூழலில், தனது அடுத்த படத்தில் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறினாராம் விஜய். அட்லீ இயக்கும் இந்தப் படத்துக்காக வடிவேலுவுடன் பேசி, விஜய்யின் விருப்பத்தைச் சொன்னாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. வடிவேலுவும் சம்மதித்துவிட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: