அஸ்வின் மீது கேப்டன் டோனி கோபம்!…

விளம்பரங்கள்

பெர்த்:-டோனி எப்போதுமே அமைதியானவர். இதனால் அவரை ‘கூல்’ கேப்டன் என்று அழைப்பார்கள். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்ததால் டோனி ஒரு வித நெருக்கடியிலேயே விளையாடினார். 7–வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த அஸ்வினிடம் ஒவ்வொரு முறையும் டோனி அறிவுரை கூறி பொறுமையுடன் ஆடுமாறு வலியுறுத்தினார். அவரும் அதே மாதிரி செய்தார்.

டோனி அடித்த பந்தில் அஸ்வின் தேவையில்லாமல் 2–வது ரன்னுக்கு ஓடி வந்தபோது டோனி கோபம் அடைந்தார். பந்தை பார்த்து ஓடுமாறு அவர் சைகையில் உணர்த்தினார். மேலும் ரன் எடுக்க ஓடும் போது இருவரும் ஒரே திசையில் ஓடியதால் மோதிக்கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: