செய்திகள்,விளையாட்டு 35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!…

35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!…

35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!… post thumbnail image
பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று பெர்த் நகரில் நடந்த 28–வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணி (பி பிரிவு) மோதின. இந்திய அணியில் புவனேஸ்வர்குமாருக்கு பதில் முகமதுஷமி இடம் பெற்றார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் சுலைமான் பென்னுக்கு பதில் கேமர் ரோச் சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க வீரர்களாக கிறிஸ்கெய்ல், ஸ்மித் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை முகமது சமி வீசினார். 3–வது பந்து சுமித் பவுண்டரி அடித்தார். முதல் ஓவரில் 5 ரன் எடுக்கப்பட்டது.

உமேஷ் யாதவ் வீசிய 2–வது ஓவரில் 1 ரன் எடுத்தனர். 5–வது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. முகமது ஷமி பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் அவுட் ஆனார். அவர் 6 ரன் எடுத்தார். அடுத்து சாமுவேல்ஸ் களம் வந்தார். உமேஷ்யாதவ் வீசிய 8–வது ஓவரில் கிறிஸ்கெய்ல் பந்தை தூக்கி அடித்தார். கஷ்டமான இந்த கேட்சை மொகித்சர்மா பிடிக்க தவறினாலும் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். அதை கோலி பிடித்து சாமுவேல்சை ரன் அவுட் ஆக்கினார். அப்போது ஸ்கோர் 15 ரன்னாக இருந்தது.

அந்த ஓவரில் கிறிஸ்கெய்ல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். ஆனால் அவரது அதிரடி நீடிக்கவில்லை. முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார். கிறிஸ்கெய்ல் 21 ரன் (27 பந்து 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து களம் வந்த ராம்தின் தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டு ஆனார். அவரது விக்கெட்டை மொகித்சர்மா கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 35 ரன்னாக இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி