செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்!…

தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்!…

தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்!… post thumbnail image
சென்னை:-‘ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’, ‘பரதேசி’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டிங் பணிகளை செய்தவர் எடிட்டர் கிஷோர். சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு இருந்தால் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்களில் தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில், இன்று அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமானது. இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 2.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. 36 வயதான கிஷோருக்கு இன்னும் திருமணமாகவில்லை. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் இவரது சொந்த ஊர் ஆகும். ‘ஈரம்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர். ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த எடிட்டர் என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார். கிஷோரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி