‘தல – 56′ திரைப்படத்தின் ரகசியங்கள்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்திற்கு தற்போது அஜித் ரசிகர்கள் தல 56 என தற்காலிகப் பெயர் வைத்துள்ளனர். அஜித்திற்கு சில தினங்களுக்கு முன் தான் ஆண் குழந்தை பிறந்தது.

இதை அவரது ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்கள் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தல 56 படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது மட்டும் தான் அனைவரும் அறிந்த தகவல், பலருக்கும் அறியாத தகவல் அந்தப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கிராமத்து இளைஞனாக ஒரு வேடத்திலும், நகரத்தில் வசிப்பவராக இன்னொரு வேடத்திலும் நடிக்கிறாரார் அஜித். இவருடன் சந்தானம் படம் முழுவதும் இணைந்து வருகிறார். இதற்கு முன்பு அஜித் இரட்டை வேடத்தில் நடித்த படங்களில், அசல் படம் மட்டும் தான் தோல்வியடைந்தது. அதற்கு முன் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி, வில்லன் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: