செய்திகள்,முதன்மை செய்திகள் நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது!…

நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது!…

நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார். ஆவணப்படமாக இப்பேட்டியை லெஸ்லி தயாரிக்க, உலக பெண்கள் தினமான வரும் 8ம் தேதியன்று இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப பி.பி.சி. தொலைக்காட்சி திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆவணப்படம் எடுக்க அனுமதி வழங்கியது குறித்தும், குற்றவாளியின் பேட்டி குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி நோட்டீஸ் அளித்தார். இதையடுத்து நேற்று ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பல உறுப்பினர்கள், எப்பொழுது நிர்பயா குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்று கேள்வியெழுப்பினர். குறிப்பாக ஜெயா பச்சன் உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் மிகுந்த ஆவேசத்துடன் பேசினர்.
லோக்சபாவிலும் இதே நிலை தான் நீடித்தது. எம்.பி.க்களின் ஆவேச பேச்சுக்கு பின் பதிலளித்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிர்பயா கொலை குறித்த ஆவணப்படம் ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாகவும், குற்றவாளியிடம் பேட்டி காண அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் இந்தியா தடை விதித்துள்ள போதும், நேற்றிரவே நிர்பயா குறித்த ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது. பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. ஆவணப்படத்தை பார்ப்பதற்கான விருப்பம் அதிகரித்ததால், முன் கூட்டியே ஒளிபரப்பியதாக பி.பி.சி. கூறியுள்ளது. இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட நிர்பயா குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒப்புதலுடன் தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது என்றும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி