அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…

தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…

தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!… post thumbnail image
சியோல்:-தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை நீடித்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும், வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இதனால் கோபமடைந்த வட கொரியா, 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது.

மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்றும், அவர்களை சமாளிக்க ‘இரக்கமற்ற தாக்குதல்கள்’ நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று வட கொரியா சபதம் செய்தது. இந்நிலையில் இன்று தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பர்ட் முகத்தில் கிம் கி-ஜோங் என்ற 55 வயது நபர் கத்தியால் குத்தினார்.

லிப்பர்ட்டின் இடது கை மணிக்கட்டையும் அந்த நபர் கத்தியால் கிழித்தார். தென் கொரியாவும், வட கொரியாவும் ஒன்றாக இணையவேண்டும் என்று கோஷமிட்டவாறே, கத்தியால் குத்திய அந்த நபரை, தென் கொரிய போலீசார் மடக்கி பிடித்தனர். கத்திக்குத்தால் லிப்பர்ட் முகத்திலிருந்தும், மணிக்கட்டிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்ததால், உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக கூறியுள்ள அமெரிக்கா, இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி