செய்திகள்,திரையுலகம் ‘காக்கி சட்டை’ படம் குறித்து வெளிவந்த உண்மை!…

‘காக்கி சட்டை’ படம் குறித்து வெளிவந்த உண்மை!…

‘காக்கி சட்டை’ படம் குறித்து வெளிவந்த உண்மை!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி இன்னும் சில தினங்களில் விண்ணை தொட்டாலும் ஆச்சரியம் இல்லை. அந்த வகையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளிவந்த ‘காக்கி சட்டை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. காக்கி சட்டை திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ 22 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம்.
வெளிநாடுகளில் ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இப்படம் மொத்தம் 3 நாட்களில் ரூ 22 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நடிகர் நடித்த 4 படங்களில் இந்த உயரத்தை அடைவது வேறு எவராலும் சாத்தியமில்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தை வெளியிட்டவர்களுக்கு நல்ல லாபம் தான் கிடைத்துள்ளதாம், இதை வைத்து பார்க்கையில் இப்படமும் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் வரிசை தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி