நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்!…

விளம்பரங்கள்

சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தான் தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகிவிடுகிறது. அனிருத் இசையில் வெளியான ‘காக்கி சட்டை’ படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

மேலும் இளையதளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ‘கத்தி’ படத்தின் பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட்டாகியது. விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் வெற்றிக்கு இவரின் பின்னணி இசை மிகவும் உதவியது. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் மனம் திறந்துள்ளார். மிகப் பெரிய ஹீரோவான விஜய் சாருடைய படத்திற்கு இசையமைத்ததால் தான் மக்களிடமிருந்து நான் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்தது. விஜய் சார் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: