செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் 30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!…

30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!…

30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!… post thumbnail image
மும்பை:-குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் .25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதால், பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியவுடனேயே மிகப்பெரும் உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை விலை உயர்வை சந்தித்தது. இதன் காரணமாக 30000 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்.

நேற்று 9000 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்ட தேசிய பங்குச்சந்தை நிப்டியும் இன்று 100 புள்ளிகள் வரை உயர்வை சந்தித்து. இன்றைய முன்பேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 30024 புள்ளிகள் வரை உயர்வடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி அதிகபட்சமாக 9119 புள்ளிகள் வரை உயர்வடைந்தது. இன்றைய பங்குவர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள் மற்றும் வாகனத்துறை பங்குகள் உயர்வை சந்தித்தன. அதே சமயம் மருத்துவத்துறை பங்குகள் விலை குறைவை சந்தித்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி