செய்திகள்,திரையுலகம் ‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை…

‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை…

‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி இன்னும் சில தினங்களில் விண்ணை தொட்டாலும் ஆச்சரியம் இல்லை. அந்த வகையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தற்போது இப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. காக்கிசட்டை தமிழ் நாட்டில் மட்டும் ரூ 13.35 கோடி வசூல் செய்துள்ளது. கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்களில் ரூ 1.75 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

இப்படம் மொத்தம் 3 நாட்களில் ரூ 22 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நடிகர் நடித்த 4 படங்களில் இந்த உயரத்தை அடைவது வேறு எவராலும் சாத்தியமில்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி