நியூஜெர்ஸியில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூஜெர்ஸியின் கிலன் ராக் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய-அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று கடந்த வருடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த கல்வி மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளிகளில் 2300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் வளர்ந்து வரும் இந்திய சமூகத்தின் தேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நவம்பர் 11ம் தேதியன்று (தீபாவளி) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட கல்வி வாரியம் அறிவித்துள்ளது. கல்வித்துறையின் இந்த அறிவிப்பு மாவட்டத்தில் உள்ள இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: