நடிகர் அமீர்கானுக்கு 1 மணி நேர சம்பளம் ரூ. 2 கோடி!…

விளம்பரங்கள்

மும்பை:-இந்தி நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். திருமணமான நட்சத்திரங்களும் ஜோடியாக நடிக்க பெரும் தொகை வாங்குகிறார்கள். அபிஷேக்பச்சனும் ஐஸ்வர்யாராயும் இணைந்து விளம்பர படங்களில் நடிக்கின்றனர். சயீப் அலிகான் கரினா கபூரும் நிறைய விளம்பர படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்கள்.

தற்போது அமீர்கானும் அவரது மனைவி கிரண்ராவும் விளம்பர படமொன்றில் சேர்ந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஒரு மணி நேரம் மட்டுமே நடித்தார்கள்.
இந்த ஒரு மணி நேரத்துக்கு அமீர்கான் வாங்கிய சம்பளம் ரூ. 2 கோடி. இது சக நடிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. விளம்பர படத்துக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் அமீர்கான் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: