செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!…

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!…

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு கடந்த 1-ந் தேதி வரை 1,115 பேர் பலியாகி இருக்கிறார்கள். 20,795 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் இந்த நோயை பரப்பும் கிருமிகள் குறைந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 275 பேர் பலியாகி உள்ளன.

ராஜஸ்தானில் 267 பேரும், மத்திய பிரதேசத்தில் 160, மகாராஷ்டிராவில் 152, தெங்லுங்கானாவில் 57, பஞ்சாபில் 44, கர்நாடகாவில் 46, டெல்லியில் 10, அரியானாவில் 22, ஆந்திராவில் 14, இமாச்சல பிரதேசத்தில் 8, ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளாவில் 7 பேர்களும் பலியாகி இருக்கிறார்கள். நோயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி