செய்திகள்,விளையாட்டு ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு – மேரி கோம் அறிவிப்பு!…

ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு – மேரி கோம் அறிவிப்பு!…

ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு – மேரி கோம் அறிவிப்பு!… post thumbnail image
புது டெல்லி:-ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், அடுத்த ஆண்டு ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 32வயதான மேரி கோம் இதற்கு முன்பும் இதேபோன்று தனது ஓய்வு முடிவு குறித்து பல முறை மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால், இப்போது தனது கடைசி போட்டி ரியோ ஒலிம்பிக் போட்டிதான் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். புதுடெல்லியில் இன்று நடைபெற்ற சமூக ஊடக பிரச்சார துவக்க விழாவில் மேரி கோம் தனது ஓய்வு முடிவு குறித்து பேசியதாவது:-

2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன். மூன்று குழந்தைகளை பெற்றபிறகு யார் தான் கடுமையான போட்டிகளை எதிர்கொள்வார்கள்? நான் ரியோ போட்டியில் தங்கம் வென்று மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன். அதனால் 2016 வரை விளையாட விரும்புகிறேன். அதன்பின்னர் இம்பாலில் பாக்சிங் அகாடமியை உருவாக்குவதில் கவனம் செலுத்துவேன். அதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கிறேன். பாக்சிங் அகாடமி மூலம் ஏராளமான மேரி கோம்களையும், ஏராளமான சாம்பியன்களையும் உருவாக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி