செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஒருநாள் தரவரிசையில் சரிவை சந்தித்த கோலி – தோனி!…

ஒருநாள் தரவரிசையில் சரிவை சந்தித்த கோலி – தோனி!…

ஒருநாள் தரவரிசையில் சரிவை சந்தித்த கோலி – தோனி!… post thumbnail image
லண்டன்:-சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் 3வது இடத்தில் இருந்த கோலி 4வது இடத்துக்கும், 8வது இடத்திலிருந்த தோனி, 10வது இடத்துக்கும் கீழிறங்கினர். அதே சமயம் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 7-வது இடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் போட்டிக்கான பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் முகமது ஷமியும், அஸ்வினும் ஏற்றம் கண்டிருக்கின்றனர். 25வது இடத்தில் இருந்த ஷமி 14 இடங்கள் முன்னேறி தற்போது 11வது இடத்தில் உள்ளார். நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டிகளில் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 6 இடங்கள் முன்னேறிய அஸ்வின் தற்போது 16வது இடத்தில் உள்ளார். எனினும் உலக கோப்பை முடியும் தருவாயில் இப்பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி