செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!…

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!…

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!… post thumbnail image
நியூயார்க்:-உலகின் செல்வந்தர்களை தரவரிசை செய்து பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை 2015ம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 90 இந்தியர்கள் பட்டியலில் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்களில் முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். உலக செல்வந்தர்கள் பட்டியலில் இவர் 39-வது இடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, மருந்து உற்பத்தி நிறுவன அதிபரான திலிப் சங்வி 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியாக இரண்டாவது இடத்தை (உலக அளவில் 44-வது இடம்) பிடித்துள்ளார். விப்ரோ நிறுவன அதிபரான அசிம் பிரேம்ஜி 19.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுடன் மூன்றாவது இடத்திதை (உலக அளவில் 48-வது இடம்) பிடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி