பிளேபாய் கதையில் நடிக்கும் நடிகை இனியா!…

விளம்பரங்கள்

சென்னை:-‘வாகை சூடவா’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா. தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் சமீபத்தில் வெளியான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். தற்போது, மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காதல் சொல்ல நேரமில்லை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உதய்குமார் என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், கஞ்சா கருப்பு, இளையராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீநிவாசன். குமார் பாண்டியன் என்பவர் இசையமைக்கிறார். ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஸ்ரீசினி கிரியேசன்ஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரித்துள்ளது.

எல்லா பெண்களையும் வசப்படுத்திவிட வேண்டும் என்று நினைக்கும் பிளேபாய் ஒருவன், தனக்கு உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாக பொய் சொல்லி கொண்டிருப்பான். அந்த பிளேபாய்த்தனம் எப்படியெல்லாம் அவனது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை மையக்கருவாக வைத்து படமாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா ஆகிய இடங்களில் படமாகியுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: