பிரபல இந்தி நடிகர்கள் சம்பள பட்டியல் – ஒரு பார்வை…

விளம்பரங்கள்

மும்பை:-இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக இவர்கள் வாங்கும் கோடிகள் மிக மிக அதிகம் என்கின்றனர் இந்தபட உலகினர். நடிகர்களின் சம்பள பட்டியலில் சல்மான்கான் முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு இவர் வாங்கும் சம்பளம் ரூ.50 கோடி. இளம் கதாநாயகர்கள் பலர் வந்து இருந்தாலும் சல்மான்கான் மார்க்கெட் கொஞ்சமும் சரியவில்லை.

50 வயதை எட்டிய பிறகும் கூட முன்னணி நடிகராகவே வலம் வருகிறார். இவரது படங்கள் வசூலை குவிக்கின்றன. கமர்ஷியல் பட நடிகர் என்ற ‘இமேஜை’ தக்க வைத்துள்ளார். அக்‌ஷய்குமார் ஒரு படத்துக்கு ரூ.45 கோடி சம்பளம் வாங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரை இந்தி பட உலகில் ‘கலெக்‌ஷன் கிங்’ என வர்ணிக்கிறார்கள். ‘மினிமம் கேரன்டி’ என்றும் தயாரிப்பாளர்களிடம் பெயரெடுத்து உள்ளார். அமீர்கான் ரூ.40 கோடி சம்பளம் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து வருகிறார்.

இவரது படங்களும் வசூல் குவிக்கின்றன. பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் ரூ.35 கோடி சம்பளம் வாங்குகிறார். இவர் படங்களும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுகின்றன.
அஜய் தேவ்கானும் ரூ.35 கோடி சம்பளம் பெறுகிறார். இவர் சமீபத்தில் நடித்த ‘சிங்கம்’ படம் வெற்றிகரமாக ஓடின. ஹிருத்திக் ரோஷன் ரூ.25 கோடி சம்பளம் வாங்குகிறார். இவரது படங்களுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ரன்பீர் கபூர் ரூ.20 கோடி சம்பளம் பெறுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: