அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரியங்கா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவாரா?…

பிரியங்கா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவாரா?…

பிரியங்கா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவாரா?… post thumbnail image
புதுடெல்லி:-கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 15 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போனது. கட்சியில் தனது ஆலோசனைகளை மூத்த தலைவர்கள் சிலர் ஏற்காமல் தடுத்துவிடுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கருதுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணித்துவிட்டு ராகுல் காந்தி விடுமுறையில் சென்றுள்ளார். அவர் வெளிநாடு எங்கும் செல்லவில்லை, உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் ஏதோ ஒரு பகுதியில் இருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதைப்பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தலைவர் பதவியை ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. அதே சமயம் தனது தங்கை பிரியங்காவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கருதுகிறார்.

கட்சியை ஒருங்கிணைக்கும் விதமான பதவி அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கடந்த 3 மாதங்களாக கூறிவருகிறார். இதனையும் கண்டுகொள்ளாமல் இருந்த கட்சியின் மூத்த தலைவர்கள், இப்போது இதுபற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பிரியங்காவுக்கு முக்கிய பதவி வழங்குவதால் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியை மீண்டும் இளமையாக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே பிரியங்காவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி