செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!…

நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!…

நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!… post thumbnail image
சென்னை:-‘அமர்க்களம்’ படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து அமர்க்களமாக ஜோடி சேர்ந்தனர். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை அனோஷ்கா பிறந்தாள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து அஜித் குடும்பத்தினர், சினிமா உலகினர் மற்றும் ‘தல’ ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ‘தல’ ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி