அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் டி.வி. செய்தியில் தீவிரவாதிக்கு பதிலாக புதின் படம் ஒளிபரப்பு!…

டி.வி. செய்தியில் தீவிரவாதிக்கு பதிலாக புதின் படம் ஒளிபரப்பு!…

டி.வி. செய்தியில் தீவிரவாதிக்கு பதிலாக புதின் படம் ஒளிபரப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-மேலை நாடுகளை சேர்ந்த பிணைக்கைதிகள் 5 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்தனர். அவர்களை கொலை செய்த முகமூடி அணிந்த தீவிரவாதி கையில் கத்தியுடன் இருப்பது போன்று வீடியோ வெளியிடப்பட்டது. அந்த தீவிரவாதி யார்?… என்ற விவரம் தெரியாமல் இருந்தது. அவரை ‘ஜிகாதி ஜான்’ என அழைத்து வந்தனர்.

இந்நிலையில் முகமூடி தீவிரவாதியின் பெயர் முகமது என்வாஷி (26). அவர் லண்டனை சேர்ந்தவர் என அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஒளி பரப்பாகும் சி.என்.என். டி.வி. சமீபத்தில் இதுகுறித்து செய்தி வெளியிட்டது. அப்போது ‘ஜிகாதி ஜான்’ படத்துக்கு பதிலாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படத்தை தவறுதலாக ஒளிபரப்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட டி.வி. ஊழியர்கள் சில வினாடிகளில் புதின் படம் ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டனர்.

இதற்கிடையே சி.என்.என். டி.வி. நிறுவனம் ரஷியாவின் ‘தாஸ்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தது. அப்போது தவறுதலாக விளாடிமிர் புதின் படம் ஒளிபரப்பப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இதுபோன்று தவறுதலாக ஒளிபரப்பியது முதல் முறையல்ல. கடந்த மாதம் உக்ரைனுக்கு பதிலாக ரஷியா வீடியோவை இந்த டி.வி. தவறுதலாக ஒளிபரப்பியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி