செய்திகள்,திரையுலகம் ஐ, என்னை அறிந்தால் படங்களின் தற்போதைய வசூல் நிலவரம் – ஒரு பார்வை…

ஐ, என்னை அறிந்தால் படங்களின் தற்போதைய வசூல் நிலவரம் – ஒரு பார்வை…

ஐ, என்னை அறிந்தால் படங்களின் தற்போதைய வசூல் நிலவரம் – ஒரு பார்வை… post thumbnail image
சென்னை:-இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆரம்பம் முதலே செம்ம விருந்து தான். ஷங்கரின் பிரம்மாண்டப்படமான ‘ஐ’ திரைப்படம் பொங்கலுக்கு வந்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதில் ஐ திரைப்படம் தமிழகத்தில் 500 திரையரங்குகளில் வெளிவந்து தற்போது 60 திரையரங்குகளில் 50 நாளை கடக்கிறது.

அதேபோல் 500 திரையரங்குகளில் வெளிவந்த என்னை அறிந்தால் சுமார் 300 திரையரங்குகளில் 25 நாளை கடக்கிறது. விக்ரமின் ஐ தற்போது வரை ரூ 205 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், என்னை அறிந்தால் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாகவும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களால் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி