பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு பன்றி காய்ச்சல்!…

விளம்பரங்கள்

மும்பை:-இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனம் கபூர். இவர் இந்தியில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சோனம் கபூர் தற்போது சல்மான் கானுடன் இணைந்து ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது.

காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பன்றிக்காய்ச்சலுக்காக ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது, பன்றி காய்ச்சலால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவருடைய உடற்பயிற்சியாளரும் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: